in

பத்திர பதிவாளர் திருமதி கண்மணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் போராட்டம் அறிவிப்பு

பத்திர பதிவாளர் திருமதி கண்மணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் போராட்டம் அறிவிப்பு

கையூட்டு வாங்கும் செல்லம்பட்டி பத்திர பதிவாளர் திருமதி கண்மணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் போராட்டம் அறிவிப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக பாமக புறநகர் மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் பத்திரப் பதிவுக்கு கையூட்டு வாங்கும் செல்லம்பட்டி பத்திர பதிவாளரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி பத்திர பதிவாளர் கண்மணி அவர்கள் பத்திரப்பதிவுக்கு கையூட்டு வாங்கிவருவதாகவும் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க கோரி பாமக சார்பில் மாவட்ட பதிவாளர், மாவட்ட ஆட்சியர், பதிவுத்துறைத்தலைவர், பதிவுத்துறை துனைத்தலைவர், மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை என அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் பல்வேறு கட்டங்களில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இன்று பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்

மேலும் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் பாமக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில்
மாவட்ட தலைவர் ராஜாராம் மாவட்ட துணை செயலாளர் பாக்கியநாதன் ஒன்றிய செயலாளர் தெய்வம் பிரசாத் கொள்கை பரப்பு செயலாளர் குமார் வழக்கறிஞர் அஜித் குமார் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்


தொடர்ந்து செய்தால் இடம் பேசிய பாமக புறநகர் மாவட்டச் செயலாளர் முருகன்
“செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக கண்மணி கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வருகிறார். அவர் மீது அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, பதிவு செய்யக்கூடாத சில பத்திரங்களை பதிவு செய்வதற்காக குறிப்பிட்ட தொகை லஞ்சமாக பெறப்படுவதாகவும், லேஅவுட் அனுமதி உள்ளிட்ட ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகளில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் உள்ளன.

இதுதொடர்பாக பாமக சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சார்பதிவாளர் மீதான புகார் தொடர்பாக மாவட்ட பதிவாளர் செந்தில்குமார், டிஐஜி, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னையில் உள்ள பத்திரப்பதிவுத்துறை உயர் அதிகாரிகளிடமும் ஆதாரங்களுடன் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழக முதலமைச்சரின் புகார் தொடர்பான வழிமுறைகளிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பத்திரப்பதிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வருவாய் விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தாலே முறைகேடுகள் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும்.
எனவே, சார்பதிவாளர் கண்மணி மீது உடனடியாக விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உண்மை எனத் தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையின்படி சென்னையில் கோட்டை நோக்கி போராட்டம் நடத்தத் தயாராக உள்ளோம்.

மேலும், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்” என்றார்.

What do you think?

வீரராகவபுரம் அம்மன் திருக்கோவில் ஆடி முளைப்பாரி உற்சவம்

உயிரிழந்த சிறுவனின் உடலை பெறாமல் குடும்பத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்