ஸ்ரீ யோக முனீஸ்வரர் ஆலயத்தில் 46-ஆம் ஆண்டு ஆடி திருவிழா
செஞ்சி அருகே ஸ்ரீ யோக முனீஸ்வரர் ஆலயத்தில் 46-ஆம் ஆண்டு ஆடி திருவிழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சேத்பட் சாலையில் பொன்பத்தி கிராம எல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ யோக முனீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் 46-ஆம் ஆண்டு ஆடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு,பொங்கல் வைத்து தங்களது குலதெய்வத்தை வழிபட்டனர்.
தொடர்ந்து, ஸ்ரீ யோக முனீஸ்வரர் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பம்பை, உடுக்கை மற்றும் மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். அப்போது சில பக்தர்களுக்கு அருள் வந்து ஆடிய நிகழ்வுகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, ஆலய நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


