திருவண்ணாமலைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
கங்கு ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா……
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்து வருகின்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இரண்டு நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்ள வருகிறார்.
இந்நிலையில் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்து பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து கங்கு ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை அடுத்த அடிஅண்ணாமலை பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடத்தில் இறங்கி கார் மூலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை வந்தடைந்தார்.

அண்ணாமலையார் கோவிலில் சம்மந்த விநாயகர் சன்னதி அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரத்தில் சாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் அண்ணாமலையார் கோவிலில் இருந்து புறப்பட்டு கிரிவலப் பாதையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.
