in

மணல் திருட்டில் ஈடுபட்ட மாட்டு வண்டியை பறிமுதல் செய்து 15 கிலோமீட்டர் தூரம் காவலர்களே ஒட்டி வந்த சம்பவம்…

மணல் திருட்டில் ஈடுபட்ட மாட்டு வண்டியை பறிமுதல் செய்து 15 கிலோமீட்டர் தூரம் காவலர்களே ஒட்டி வந்த சம்பவம்…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கடலாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஷார் கிராமத்தில் இரவு நேரத்தில் மாட்டு வண்டியில் மணல் திருட்டு நடைபெறுவதாக கடலாடி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

அந்த தகவலின் அடிப்படையில் இன்று இரவு 8 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது செய்யாற்றில் இருந்து 3 மாட்டு வண்டிகளில் மணல் எடுத்துக்கொண்டு ஆலத்தூரிலிருந்து மஷாருக்கு சென்று கொண்டிருந்தபோது அவர்களை கடலாடி போலீசார் மடக்கி பிடித்த போது மாட்டு வண்டிகளை அப்படியே விட்டுவிட்டு மூன்று மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களில் ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

உடனடியாக மஷாரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் பறிமுதல் செய்த மாட்டு வண்டிகளை காவலர்களே ஒட்டி வந்து காவல் நிலையத்தில் விட்டனர்.

இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விஸ்வநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பவுன்குமார், ராஜீவ்காந்தி இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மேலும் ஒரு மாட்டு வண்டியின் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் கலசபாக்கம்,கடலாடி,
ஆதமங்கலம்புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் இதுபோன்று மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிகரித்துள்ளது.எனவே வருவாய்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

நாமக்கல் ஆரியூர் முத்துசாமி ஆலயத்தில் ஆடி பௌர்ணமி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செய்த பக்தர்கள்

புதுச்சேரி – ஏனாமில் ₹15,000-க்கு ஏலம் போன புலசா மீன்!