சுடுகாட்டில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்
தேனி அருகே பொம்மையுடன்பட்டி பாலன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் சுடுகாட்டில் அப்பகுதியில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்
இந்த நிலையில் சுடுகாட்டு பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் அப்பகுதி முழுவதும் குப்பை கூடமாக காட்சியளித்து வருகிறது
மேலும் குப்பைகளில் உணவுகளை தேடிச்செல்லும் நாய்கள் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து வருவதாகவும் இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றனர் இதனால் அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றன
இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுடுகாடு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றி முறையான குடிநீர் மற்றும் மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்


