in

எச்சில் துப்பியதை தட்டிக்கேட்டவரின் கையை வெட்டிய இளநீர் வியாபாரி கைது

கும்பகோணம் அரசு மருத்துவமனை பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தவர் மீது எச்சில் துப்பியதை கேட்டதால் மது போதையில் அறிவாளால் கையை துண்டாக்கிய இளநீர் வியாபாரி கைது .

கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு திருவாரூர் மாவட்டம் கீரங்குடி மாதா கோயில் தெருவை சேர்ந்த அந்தோணி வயது( 58 )இவர் பிரசவத்திற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதனது மருமகளை பார்ப்பதற்காக வந்துவிட்டு தனது உறவினர் அறிவழகன் உடன் அரசு மருத்துவமனை பேருந்து நிலையத்தில் பேசிக்கொண்டு அமர்ந்து இருந்தனர்.

உமாமகேஸ்வரபுரம் புளியம் பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகன் வயது (58 )என்ற இளநீர் வியாபாரி வெற்றிலை பாக்கு போட்டு எச்சியை துப்பி உள்ளார் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த அறிவழகன் மீது பட்டதால் அந்தோணி ஏன் எச்சில் துப்பினாய் என கேட்டுள்ளார்.

மது போதையில் இருந்த இளநீர் வியாபாரி மோகன் ஆத்திரத்தில் அறிவாளால் அந்தோணியின் இடது மணிக்கட்டை வெட்டியதில் கை தனியாக கீழே விழுந்தது .

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இளநீர் வியாபாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கைதுண்டான அந்தோணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு துண்டான கை தனியாக பாதுகாப்புடன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து இளநீர் வியாபாரியை கைது செய்துள்ளனர் .

What do you think?

ஆடி தபசு திருவிழா: மேல சங்கரன்கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

வாடிக்கையாளர் விவரங்களை தவறாக பயன்படுத்தியதாக புகார்