in

மாமன்றத்தில் விஜய் படம் வைக்க முயற்சி; திமுக-தவெக இடையே பரபரப்பு

மாமன்றத்தில் விஜய் படம் வைக்க முயற்சி; திமுக-தவெக இடையே பரபரப்பு

திருவண்ணாமலை மாநகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. இதில் 33 கவுன்சிலர்கள் திமுக கட்சியை சேர்ந்தவர்கள். 6 கவுன்சிலர்கள் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் திமுக கட்சியை சேர்ந்த பெண் மேயர் நிர்மலா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசினர்.

குறிப்பாக 32வது வார்டு உறுப்பினர் பழனி அதிமுக கட்சியில் வெற்றி பெற்று தற்போது தவெக கட்சியில் இணைந்துள்ளார்.

இறுதியாக மாமன்ற கூட்டம் நிறைவு பெற்றவுடன் புதியதாக தவெக கட்சியில் இணைந்த 32வது வார்டு உறுப்பினர் பழனி தமிழக முதல்வர் விஜய் புகைப்படத்தை மாமன்ற கூட்ட அரங்கில் பொருத்த முயற்சி செய்தார்‌. அப்போது திமுக கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழக முதல்வர் விஜய் புகைப்படத்தை பொருத்த அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கருணாநிதி வாழ்க, ஸ்டாலின் வாழ்க என கோஷம் எழுப்பியதால் மாமன்ற கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தமிழக முதல்வர் விஜய் புகைப்படத்தை மாநகராட்சி அலுவலகத்தில் பொருத்திவிட்டு 32வது வார்டு உறுப்பினர் பழனி அங்கிருந்து சென்றது குறிப்பிடத்தக்கது. மாமன்ற கூட்டம் நிறைவு பெற்று தமிழக முதல்வர் விஜய் புகைப்படத்தை பொருத்த முயன்ற போது திமுக கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்தி கோஷம் எழுப்பியதால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

What do you think?

ஆட்டுடன் நூதன போராட்டம்; அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் மனு

டெல்லி தாக்குதலைக் கண்டித்து சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது