in

அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா

அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா

 

உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில் ஒவ்வொரு நாளும் பெருமாள் மாலை வேளையில் விசேஷ வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க கூடிய நிலையில் இரண்டாம் நாள் ஆன இன்று கோவில் பிரகாரத்தில் இருந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு சக்கரத்தாழ்வார் கோவிலில் இருந்து புறப்பட்டு 18ஆம் படியின் ஒரு கதவு வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து தேரோடும் வீதி வழியாக உலா வந்த பிறகு மீண்டும் 18 படி கருப்பணசுவாமி கதவுகள் வழியாக கோவில் பிரகாரத்திற்கு சென்றார்.

அதன் பிறகு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தங்க பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் சுந்தர்ராஜ பெருமாள் எழுந்தருளி கொடிமரத் அருகே பாராயணம் பாடப்பட்ட நிலையில் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து ஆடி பிரம்மோற்சவ விழாவில் இரண்டாம் நாளான இன்று வீதி உலாவிற்கு புறப்பட்டார்

கோவிலை சுற்றி வந்த நிலையில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் வழியாக வந்து தொடர்ந்து தேரோடும் வீதி வழியாக வீதி உலா சென்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் ஆடி மாதத்தை முன்னிட்டு தங்களுடைய குலதெய்வமாக இருக்கக்கூடிய கள்ளழகரை தரிசனம் செய்த நிலையில் கோவிந்தா என பக்தி முழக்கமிட்டனர்.

  

இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் வகிக்கக்கூடிய சென்னை பூர்வீகமாக கொண்ட இல்லத்தரசி தனது குடும்பத்தினர் ரோடு இங்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்ததும் அழகரை பார்த்ததும் 18ம் படி கருப்பண சுவாமி கதவு திறக்கப்பட்டதை பார்த்ததும் மகிழ்ச்சி என்று தெரிவித்த நிலையில் ஆண் பக்தர் மற்றும் பெண் பக்தர் என மூன்று நபர்களின் பேட்டி உள்ளது.

குறிப்பு 29ஆம் தேதி மாலை வேளையில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 18ம் படி கருப்பண சுவாமியின் இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டு படி பூஜைகள் நடைபெற உள்ள நிலையில் ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சக்கரத்தாழ்வார் எழுந்தருளும் போது ஒரு கதவு மட்டுமே திறக்கப்பட்டு சக்கரத்தாழ்வார் அந்த கதவு வழியாக வருகை தந்து மீண்டும் கோவிலுக்குள் செல்வது குறிப்பிடத்தக்கது.

What do you think?

உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்

நெல் மூட்டைகள் தேக்கம் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம்