கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
2014 முதல் 2021 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் பருவ கால பணியாளர்களை பணி நிரந்தரம் கோரி கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக எதிரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சிவகுருநாதன் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் வாணிப கழகத்தில் பருவ கால ஊழியர்களாக பணியாற்றும் ஊழியர்கள் 40 மற்றும் 50 வயதை கடந்து விட்டோம் என்றும் 13 ஆண்டுகள் குறைவான ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம் என்றும் 2014 முதல் 2021 வரை பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் 12/3 ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கக்கோரி முழக்கமிட்டனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தில் பருவ காலத்தில் பணியாற்றும் 300 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


