பழமையான மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் நாளில் சிறப்பு அலங்காரம்
கொடைக்கானல் பேத்துபாறை கிராமத்தில் உள்ள பழமையான மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் நாளில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனை வழிபட்ட கிராம மக்கள்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துபாறை கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு மாரியம்மன் கோவிலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கும்பாபிசேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த நிலையில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக விநாயகர், முருகன், கருப்பசாமி , நவக்கிரகம் , காவல் தெய்வம் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் பேத்துப்பாறை, அஞ்சு வீடு, பெருமாள் மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்
அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


