தஞ்சாவூர் காணக் கிடைக்காத 27 பெருமாள் கருடசேவை
தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற 27 பெருமாள் கருடசேவை வெகு விமரிசையாக நடைபெற்றது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதிக்கு அடுத்தபடியாக 27 பெருமாள் கருடசேவை வேறெங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும் தஞ்சையில் இங்கு மட்டுமே குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பெருமாள் கோவில்களில் 27 கருட சேவை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருடசேவை புறப்பாடு நடைபெற்று வருகிறது. அதைப்போல் இந்தாண்டும் 27 பெருமாள்கள் கருடசேவை புறப்பாடு அதிவிமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை கோயில்களில் இருந்து திவ்யதேச பெருமாள்களுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு ஸ்ரீ நீலமேகப்பெருமாள், ஸ்ரீ நரசிம்ம பெருமாள், ஸ்ரீமணிகுன்னப் பெருமாள், ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள், ஸ்ரீ யாதவ கண்ணன், ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள், ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட 27 பெருமாள் கோவில்களிலிருந்து கருட வாகனத்தில் சுவாமி புறப்பட்டு தஞ்சை நகரின் முக்கிய ராஜவீதிகளான கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி ஆகிய தேரோடும் வீதிகளில் வலம் வந்து சேவை அருள்பாலித்தனர்.
இந்த கருட சேவையில் பஜனை பாடல்களை பாடியும், ஆடியும் பக்தர்கள் சென்றனர். இந்த பெருமாள் கருட சேவையில் உள்ளூர் பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் சுவாமியை வணங்கி தரிசனம் செய்தனர்.

திருப்பதிக்கு அடுத்தபடியாக 27 பெருமாள் கருடசேவை வேறெங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும் தஞ்சையில் இங்கு மட்டுமே குறிப்பிடத்தக்கது.


