in

செஞ்சி முருகன் திருக்கோவில் திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு

செஞ்சி முருகன் திருக்கோவில் திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு

 

செஞ்சி அருகே ஸ்ரீ சக்திவேல் முருகன் திருக்கோவிலில் திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று பாஜகவினர் கொண்டாட்டம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பொன்பத்தி குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகன் திருக்கோவிலில், பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

வெள்ளிக்கிழமை தோறும் அனைத்து முருகன் திருக்கோவில்களிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியினருக்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, இந்த வழிபாடு நடைபெற்றது.

மேலும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று, முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

இதனை முன்னிட்டு ஸ்ரீ சக்திவேல் முருகனுக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

அப்போது, பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதில் பாஜகவினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

What do you think?

காவிரியில் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு ஆராட்டு விழா

பஞ்சமுக விநாயகர் கோவில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு!