ராமேஸ்வரம் கோவில் இடங்கள் மீட்பு; அகற்றும் பணிக்கு எதிர்ப்பு
ராமேஸ்வரம் கோவில் இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு கடைகள் அகற்றம்: கடையை அகற்ற விடாமல் தர்ணா செய்த நபர்:
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் நீண்ட நாட்களாக வாடகை கொடுக்காத கடைகள் நீதிமன்ற ஆணையின்படி சீல் வைத்து ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. கடையை சீல் வைத்து உடைக்க விடாமல் கடையின் முன் அமர்ந்து ஒருவர் தர்ணாவில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகப் பிரசித்தி பெற்ற திருக்கோயிலில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இடங்கள் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கரில் இடங்கள் உள்ளன. மேலும் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கடை இலங்கையிலும் உள்ளது.
ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுவதற்காக நீதிமன்றத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் இன்று திருக்கோயில் இணை ஆணையர் செல்லதுரை தலைமையில் வீடு ஒன்று இடிக்கப்பட்டது.
மேலும் மேற்கு ரத வீதியில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான கடைகளில் நான்கு கடைகள் நீண்ட நாட்களாக வாடகை கட்டாமல் நிலுவையில் இருந்த நிலையில் நீதிமன்றத்தின் ஆணையின்படி அந்த நான்கு கடைகளுக்கும் சீல் வைத்து உடைக்கப்பட்டது.

மேலும் இந்திரா நகர் பகுதியில் 17 வீடுகள் திருக்கோயில் இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் அவர்களையும் ஏற்கனவே நீதிமன்ற ஆணையின்படி காலி செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் அவர்கள் காலி செய்யாததால் ஜேசிபி உதவியுடன் கடைகள் அகற்றுவதற்கான பணிகளை கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மேற்கு ரத வீதியில் திருக்கோயிலுக்பு சொந்தமான கடை ஒன்றை இணை ஆணையர் தலைமையிலான ஊழியர்கள் சீல் வைத்து உடைக்க முயன்ற போது அந்த கடையை நடத்தி வரும் ராஜா என்பவர் கடை வாசலில் அமர்ந்து கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது கடையை இடிக்க கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தர்ணா செய்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடைக்கான வழக்கு குறித்து விசாரித்துவிட்டு கடையை அகற்றுவது குறித்து தகவல் தெரிவிப்பதாக கூறிவிட்டு திருக்கோயில் பணியாளர்கள் சென்றனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


