ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
சோதனையின்போது அலுவலகத்தில் உள்ள பல்வேறு ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் அலுவலக செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இருப்பினும், சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களின் செல்போன்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
குறிப்பாக, ஜி-பே (GPay) உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனை செயலிகள் வாயிலாக பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த திடீர் சோதனையால் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்பு குறித்து அலுவலக அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
மேலும் முக்கிய ஆவணங்கள் ஏதும் சிக்காகததால் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


