in

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

 

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நடைபெற்றது, நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் பங்கேற்பு.

உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற பேரணியில், நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

 

முன்னதாக பெண்கள் குறித்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து வடிவேல் உறுதிமொழி ஏற்க வைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக தர்மபுரம் வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

What do you think?

புதுச்சேரி கடற்கரையில் பிரான்ஸ் தேசிய தின வானவேடிக்கை பொதுமக்கள் உற்சாகம்

இரட்டணை ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த விழாவில் கர்ண மோட்சம்