in

பா.ம.க. – உழவர் பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

பா.ம.க. – உழவர் பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

 

பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாததை கண்டித்து கும்பகோணத்தில் பா.ம.க. – உழவர் பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்.

கும்பகோணத்தில்: தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாததை கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காந்தி பூங்கா எதிரே மாவட்ட செயலாளர் மண்டபம் கலியமூர்த்தி, தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் தங்க கணேசன், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மாநில தலைவர் ஆலயமணி, மாநில துணைத் தலைவர் ஜோதிராஜ், இளைஞரணி மாநில செயலாளர் கே.ஆர். வெங்கட்ராமன், மாநில துணைத் தலைவர் அமிர்த கண்ணன், மகளிரணி பொறுப்பாளர் வீரம்மாள் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மாநில தலைவர் ஆலயமணி பேசும்போது, சென்ற ஆண்டு சம்பா நெற்பயிருக்கு காப்பீடு வழங்க வேண்டும். மேட்டூர் அணை திறந்து நீண்ட நாள் ஆகியும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. சென்ற சம்பா பயிருக்கான இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

டெல்டா மாவட்டத்தை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து, ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்வதை மாற்றி, கூட்டுறவு சங்கம் மூலமாக கொள்முதல் செய்வதாக அரசு அறிவித்திருப்பது முழுக்க முழுக்க விவசாயிகளை வஞ்சிக்கின்ற செயல்.

எனவே மீண்டும் நுகர் பொருள் வாணிப கழகம் மூலமாக இயங்கக்கூடிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாகவே விவசாயிகளுடைய நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தராவிட்டால், தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு தெரியப்படுத்தி, சௌமியா அன்புமணி தலைமையில் கும்பகோணத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.

What do you think?

கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி

முறையான திட்டமிடுதல் இல்லாததால் தள்ளுமுள்ளு..