in

விளக்கு ஏற்ற மலை சென்றவர்களுக்கு அனுமதி மறுப்பு! 

விளக்கு ஏற்ற மலை சென்றவர்களுக்கு அனுமதி மறுப்பு! 

 

காடா துணி மற்றும் விளக்கு எடுத்து செல்லும் நபர்களை மலை மீது காவல் துறையினர் அனுமதிக்காததால் பரபரப்பு…..

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

பத்தாம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திரு கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று மாலை 2668 அடி மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை ஏகன் அனேகனாக 5 மடக்கிலிருந்து ஒரு மடக்காக மாற்றி மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தை ஏற்றுவதற்காக அகலில் தீபம் ஏற்றப்பட்டு மலை உச்சிக்கு எடுத்துச் செல்லும் பக்தர்களையும், காடா துணியோடு வந்தவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி அனுமதி இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிறிய வாக்குவாதத்திற்கு பின்னர் மலை மீது செல்ல காவல் துறையினர் அனுமதி அளித்தனர்.

அண்ணாமலையார் மலை மீது மகா தீபத்தை ஏற்றுவதற்கு விளக்கை எடுத்துச் செல்வதில் கூட போலீசார் கெடுபிடி காட்டியது ஆன்மீக பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

சுவாமிமலை திருக்கார்த்திகை தேரோட்டம்