in

பிரபல பாடகர் 14 கிலோமீட்டர் கிரிவல வழிபாடு

பிரபல பாடகர் 14 கிலோமீட்டர் கிரிவல வழிபாடு

 

பிரபல கிராமிய பாடகர் வேல்முருகன் 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையார் பாடல் பாடி வழிபாடு….

இரண்டு ஆயிரம் பக்தர்களுக்கு ருத்ராட்சம் விபூதி, குங்குமம், அண்ணாமலையார் புகைப்படங்கள் அடங்கிய பிரசாதப்பை வழங்கிய பிரபல கிராமிய பாடகர்…..

பிரபல கிராமிய பாடகர் வேல்முருகன் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோ மீட்டர் கிரிவலம் மேற்கொண்டார்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பின்னணி பாடகர்கள் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிரபல கிராமிய பாடகர் வேல்முருகன் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அண்ணாமலையாரின் பக்தி பாடல்களை மனம் உருக பாடினார்.

பின்னர் அண்ணாமலையார் புகைப்படம், ருத்ராட்சம், விபூதி குங்குமம் அடங்கிய பிரசாதப்பை தொகுப்பை திருவண்ணாமலைக்கு வருகை தந்த இரண்டாயிரம் பக்தர்களுக்கு வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் அண்ணாமலையாரை தரிசிப்பதால் தனக்கு பல்வேறு நன்மைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையில் ஸ்டேட் கமிட்டி மெம்பர் பதவி தனக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், ஆதலால் அண்ணாமலையாருக்கு நன்றி தெரிவிக்க வந்ததாக பாடகர் வேல்முருகன் தெரிவித்தார்.

What do you think?

ராஜ கோபுரத்திற்கு பிரம்மாண்ட மலர் மாலை அணிவிப்பு

வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டுப் பறவைகள் வலசை