ராஜ கோபுரத்திற்கு பிரம்மாண்ட மலர் மாலை அணிவிப்பு
திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி 217 அடி உயரம் கொண்ட ராஜ கோபுரத்திற்கு பிரம்மாண்ட மலர் மாலை அணிவிப்பு….

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பிரதான கோபுரமான ராஜ கோபுரத்திற்கு பிரம்மாண்ட மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஒன்பது கோபுரங்களை கொண்டது. நான்காம் பிரதான கோபுரங்கள் மற்றும் ஐந்து சிறிய கோபுரங்கள் கொண்டது.
திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவில் முழுவதும் சுமார் 1 டன் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாளை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இந்நிலையில் இன்று அண்ணாமலையார் கோவிலின் பிரதான 217 அடி உயரம் கொண்ட ராஜ கோபுரத்திற்கு சுமார் 200 அடி வண்ண வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


