in

நாமக்கல் கல்லாங்குளம் அண்ணாமலையார் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா 7-ம் நாள் நிகழ்வு திருகல்யாண வைபவம்

நாமக்கல் கல்லாங்குளம் அண்ணாமலையார் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா 7-ம் நாள் நிகழ்வு திருகல்யாண வைபவம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கல்லாங்குளம் அண்ணாமலையார் கோயிலில் கந்தசஷ்டி விழா 7ம் நாள் பூஜையில் முருகபெருமானுக்கு கல்யாண வைபவ நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றது .

முன்னதாக கோவில் வளாகத்தில் எம்பெருமான் சிறப்பு அலங்காரத்திலும் வள்ளி தெய்வானுடன் காட்சி அளித்தார் அப்பொழுது திருமண வைபவ நிகழ்வுகள் முறைப்படி விநாயகர் வழிபாட்டுடன் துவங்கி மாலை மாற்றுதல் திருமாங்கல்யதாரணம் அணிதல் உள்ளிட்ட திருமண சட்டங்கள் மிக விமர்சையாக நடைபெற்றது பின்னர் கல்யாண கோலத்தில்சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த முருக பெருமானுக்கு தீப தீப உபசரிப்புகள் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

What do you think?

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும்! திருவாவடுதுறை ஆதீனம் அமைச்சர்களிடம் வலியுறுத்தல்!

ஸ்ரீ பாலமுருகன் சுவாமி ஆலயத்தில் திருக்கல்யாணம்