in

எம்.புதூர் கிராம கோவில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

எம்.புதூர் கிராம கோவில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

 

விருத்தாசலம் அருகே எம்.புதூர் கிராமத்தில் மூன்று கோவில்களில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எம்.புதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ புஷ்ப விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில்களின் திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று (15.11.2026) ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி மாதம் 29-ஆம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை முதல் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம், ஓமகால பூஜை எனப்படும் யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.

காலை 8.25 மணி முதல் 10.25 மணிக்குள் அமைந்த நல்ல நேரத்தில், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் நிறைந்த கலசங்கள் (கடம்) புறப்பட்டு, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

பின்னர் மூன்று கோவில்களிலும் தொடர்ச்சியாக, ஸ்ரீ புஷ்ப விநாயகர் – நிறுத்தீஸ்வரர் பரிவாரங்கள், ஸ்ரீ முத்துமாரியம்மன் – நவகிரக பரிவாரங்கள் மற்றும் ஸ்ரீ திரௌபதி அம்மன் பரிவார தெய்வங்களின் விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதில் எம்.புதூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்….

What do you think?

ஆதமங்கலத்தில் ஸ்ரீ சப்தகன்னியம்மன், ஸ்ரீ சாட்டைக்காரன் ஆலய மகா கும்பாபிஷேகம்

திருக்கார்த்திகை தீபத் திருவிழா நெய் காணிக்கை அரங்கம் திறப்பு