in

குண்ணவாக்கம் ஸ்ரீ கங்கை அம்மன், நாகாத்தம்மன் மாரியம்மனுக்கு 18ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

குண்ணவாக்கம் ஸ்ரீ கங்கை அம்மன், நாகாத்தம்மன் மாரியம்மனுக்கு 18ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

 

குழந்தை வரம் வேண்டுவோருக்கு குழந்தை தரும், போதை பழக்கத்தில் உள்ளவர்கள் நல்வழி மாறவும், வேண்டும் வரம் தரும் குண்ணவாக்கம் கிராமம் ஸ்ரீ கங்கை அம்மன்,நாகாத்தம்மன் மாரியம்மனுக்கு 18ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்…….

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் குண்ணவாக்கம் கிராமத்தில் ஸ்ரீகங்கை அம்மன், நாகாத்தம்மன், மாரியம்மன் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்திற்கு பல்வேறு பிரச்சனைகளுடன் வருபவர்கள் பொய்யின்றி உண்மையை கூறினால் அவர்களின் பிரச்சனை தீரும் என்றும், குழந்தை வரம் வேண்டுவோருக்கு குழந்தை வரம் அளிக்கும், திருமண வரம் வேண்டுவோரூக்கு திருமணம் நடக்கும், போதை, கஞ்சா பழக்கத்தில் உள்ளவர்கள் நல்வழி மாறவும், நோய் தீர்க்கவும், குடும்பப் பிரச்சினைகள் சரியாகவும், இந்த வருடம் வேண்டினால் அடுத்த வருடத்திற்குள் கண்டிப்பாக அவர்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் வந்து செல்வதாக கூறப்படுகிறது.

இக்கோவிலின் 18ஆம் ஆண்டு தீமிதி திருவிழா முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், பால்குட ஊர்வலம், விளக்கு பூஜை நடந்து, அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சனிக்கிழமை சந்தனம்,தேர் பன்னீர் அபிஷேகமும், அன்னதானமும், பம்பை மேல முழக்கத்துடன் அம்மனை அழைத்தல் நிகழ்வு வெகு சிறப்பாக நிறைவு பெற்றது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்று, தாய் வீட்டு வரிசை, அம்மனுக்கு ஆகாய மாலை போடுதல் அலகு குத்துதல், அன்னதானத்தை தொடர்ந்து அம்மன் திருவீதி உலா, தீபாராதனை நடந்து ஏழுமலை குழுவினரால் பம்பை மேலத்துடன் தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பின்னர் கட்டியாம்பந்தல் இனிய நாடக குழுவினர் வழங்கும் நாடகமும் வானவேடிக்கையும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவில் நிர்வாகியும், அருள் வாக்குத்தரும் சுவாமியமான கமலக்கண்ணன் அவர்கள் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அசைவ விருந்தும் அளிக்கப்பட்டது.

What do you think?

மயிலாடுதுறையில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சினேஹா பிரியா பள்ளி கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்தார்

நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து பெண் பணியாளர் பலி