புதுச்சேரி முத்துவிநாயகர் ஆலயத்தில் 6-ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா!
புதுச்சேரி குயவர்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துவிநாயகர் – ஸ்ரீ செல்வ முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் ஆறாம் ஆண்டு கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதையொட்டி இன்று ஸ்ரீமுருகப்பெருமானுக்கு சிக்கல் சிங்காரவேலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து பூர்ணாஹுதி, சுவாமி, வீரபகு மற்றும் வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. ஸ்ரீ பராசக்திக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இன்று சிக்கலில் வேல் வாங்குவது போன்று முத்துக்குமாரசாமி ஆலயத்தில் இன்றைய தினம் முத்துக்குமார் சுவாமி கோவில் வேல் வாங்குதல் நடைபெற்றது..
நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை சூரசம்காரம் குயவர் பாளையம் லெனின் வீதியில் மெயின் ரோட்டில் நடைபெறுகிறது..
கடந்த நவம்பர் 9ஆம் தேதி தொடங்கிய கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வுகளாக சூரசம்ஹாரமும், முருகப்பெருமான் திருக்கல்யாண பிரம்மோற்சவமும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி டாக்டர்.குமரன் மற்றும் ஆலய அர்ச்சகர்கள் செய்திருந்தனர்…

