in

என்எல்சி இயந்திரம் திடீரென்று தீப்பற்றி எரிந்தது

என்எல்சி இயந்திரம் திடீரென்று தீப்பற்றி எரிந்தது

நெய்வேலி என்எல்சி நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ்  இயங்கி வருகிறது. என்எல்சி முதலாவது சுரங்கத்தில் உள்ள மிடில் பெஞ்சில் எம் டி சி ராட்சத இயந்திரம் உள்ளது .

இந்த இயந்திரம் சுரங்கப் பகுதியில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும். இந்த ராட்சத இயந்திரத்தில் என்எல்சி பொறியாளர்கள், ஆப்பரேட்டர்கள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்டோர் 2 வது ஷிப்டில் பணியாற்றி வருகின்றனர் .

இந்நிலையில் இயந்திரத்தில் திடீரென்று  மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பணி இருந்த ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர். அப்போது ஏற்பட்ட தீ திடீரென்று ராட்சத இயந்திரம் முழுவதும் தீ பரவியது. இதுகுறித்து ஊழியர்கள் என்எல்சி தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த என்எல்சி தீயணைப்பு துறை ஊழியர்கள் ராட்சத இயந்திரத்தில் பற்றி இருந்த தீயை தண்ணீர் அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து என்எல்சி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். என்எல்சி சுரங்கப் பகுதியில் திடீரென்று மின் கசிவு ஏற்பட்டு எம் பி சி ராட்சத இயந்திரம் தீப்பிடித்து எரிந்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்து.

What do you think?

நெல்லை முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்

பழனி முருகன் கோயிலில் ரோப்கார் ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்