சாக்லேட் சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
செஞ்சியில் சாக்லேட் சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்கள் 18 பேர் மருத்துவமனையில் அனுமதி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சாக்லேட் சாப்பிட்டதைத் தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி–விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு சக மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கியுள்ளார். அந்த சாக்லேட்டை சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டது.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மாணவர்களின் உடல்நிலை தொடர்ந்து அரசு மருத்துவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கு விரைந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
மேலும், செஞ்சி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிக்கப்பட்ட காலாவதியான சாக்லேட் சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் மேலும் எந்த கடையில் சாக்லேட் வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

