in

400 ஆண்டுகள் பழமையான மகாகாளியம்மன் கோவில் உற்சவருக்கு கும்பாபிஷேகம்

400 ஆண்டுகள் பழமையான மகாகாளியம்மன் கோவில் உற்சவருக்கு கும்பாபிஷேகம்

 

ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் 400 ஆண்டுகள் பழமையான மகாகாளியம்மன் கோவில் உற்சவருக்கு கும்பாபிஷேகம்.

நூற்றுக்கணக்கான ஆண் பெண்பக்தர்கள் விரதமிருந்து பயபக்தியுடன் வழிபட்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூரில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்வ சக்தி மகாகாளியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலின் மூலவருக்கு கடந்தாண்டு வெகு விமர்சையாக கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில் இந்து சமய ஆகம விதிப்படி வடக்கு நோக்கி வீற்றிருக்கும் மூலவருக்கு மேற்கு திசையில் உற்சவர் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து வீருசின்னு ஈஸ்வரி மற்றும் கோட்டைச்சாமி திவ்யா தம்பதியினர் உற்சவர் சன்னதியை அமைத்துக் கொடுத்தனர்.

இதையடுத்து மகா காளியம்மன் உற்சவருக்கு சிறப்பாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

முன்னதாக மூன்று நாட்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் மூன்று கால பூஜைகள் வேத மந்திரங்கள் ஓத நடைபெற்ற முடிந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி 108 புண்ணிய தீர்த்தங்களிலிருந்து சேகரித்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தின் மீதி தெளிக்கப்பட்டு பாலாஜி குருக்கள் தலைமையில் ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது 48 நாட்கள் ஒரு மண்டல காலம் விரதம் இருந்த கன்னிப் பெண்களும் சுமங்கலி பெண்களும் பயபக்தியுடன் கும்ப கலசத்தை பார்த்து வழிபட்டனர்.

அப்போது வானத்தில் இரண்டு கருடன்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கோவிலை வலம் வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

இதையடுத்து கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து உற்சவரான மகாகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்பு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.

What do you think?

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் அவசரகால மீட்பு ஒத்திகை! அந்தரத்தில் சிக்கியவர்களை மீட்டுப் பயிற்சி!

காவல்துறையினர் அலட்சியம் விவசாயிகள் சாலை மறியல்