in

விபி ராம்ஜி திட்டத்தை திரும்ப பெற மறியல் போராட்டம்

விபி ராம்ஜி திட்டத்தை திரும்ப பெற மறியல் போராட்டம்

 

விருத்தாசலத்தில் பாலக்கரை ரவுண்டானாவில் விபி ராம்ஜி திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மறியல் போராட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பாலக்கரையில் வி பி ஜி ராம்ஜி திட்டத்தை திரும்ப பெற கோரி மாற்றுத்திறனாளிகள் மறியல் மற்றும் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம் விருதாச்சலம் பாலக்கரை அம்மா உணவகம் முன்பு போராளத்தில் ஈடுபட்ட மாநில குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் விருத்தாசலம் திட்டக்குடி வேப்பூர் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

மேலும் ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் அனைவருக்கும் 100 நாள் வேலையை முழுமையாக வடிகிட வேண்டும் என்றும் 100 நாள் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு குறைக்க கூடாது என்றும் அரசு மீது நிதிச் சுமை ஏற்றக்கூடாது என்றும் போராட்டம் நடத்தினர்.

பாபு தலைமையில் காவல்துறையினர் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் விருத்தாசலம் வட்டார தலைவர் விமலா, வட்டார செயலாளர் அபிப்ரஹ்மான் வட்டாரப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி திட்டக்குடி வட்டார தலைவர் ராஜேந்திரன் வட்டார செயலாளர் முருகேசன் வட்டார பொருளாளர் பன்னீர்செல்வம் வேப்பூர் வட்டாரத் தலைவர் சக்தி வட்டாரப் செயலாளர் முனுசாமி வட்டார பொருளாளர் சங்கீதா உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கருப்பு பேச்சு அணிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

What do you think?

அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் ஆனிப் பெருந்திருவிழாவிற்கான கம்பம் ஊண்டும் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.

மதுராந்தகம் ஸ்ரீ ஓசூர் மாரியம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்