in

“திரைக் கவர்ச்சி அரசியலுக்கு அடிமையாக மாட்டோம்!” – வேளாங்கண்ணியில் விழிப்புணர்வு கால்பந்து போட்டி!

“திரைக் கவர்ச்சி அரசியலுக்கு அடிமையாக மாட்டோம்!” – வேளாங்கண்ணியில் விழிப்புணர்வு கால்பந்து போட்டி!

திரைக் கவர்ச்சி அரசியலுக்கு அடிமையாக மாட்டோம்; சிந்தித்துச் செயல்படுவோம் என்ற முழக்கத்துடன், இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வேளாங்கண்ணியில் நடைபெற்ற கால்பந்துப் போட்டி பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

​நாகை மாவட்டம், வேளாங்கண்ணி கிங்பின் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இந்த விழிப்புணர்வு கால்பந்துப் போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆர்வத்துடன் களமிறங்கி விளையாடினர். வீரர்கள் பந்தை லாவகமாகக் கடத்தி கோல் அடிக்க முயன்ற விறுவிறுப்பான ஆட்டம், பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

​கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ. தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, வேளாங்கண்ணி பேரூர் திமுக செயலாளர் மரிய சார்லஸ் முன்னிலை வகித்தார். போட்டியை வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவர் டயானா ஷர்மிளா முறைப்படி தொடங்கி வைத்தார்.

​போட்டியின் நிறைவாக, பங்கேற்ற பள்ளி மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் திரண்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

​”திரைக் கவர்ச்சிக்கு அடிமையாக மாட்டோம்; நடிப்பையும் நிஜ வாழ்க்கையையும் வேறுபடுத்திப் பார்ப்போம்; எந்தவொரு கருத்தையும் ஆராய்ந்து பகுத்தறிவுடன் முடிவெடுப்போம்; சுயசிந்தனையை ஒருபோதும் இழக்க மாட்டோம்; ஜனநாயக மாண்புகளைக் காப்போம்!”

​என்று அனைவரும் ஒருமித்த குரலில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
​இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். விளையாட்டு ஆர்வத்தை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், இளைய தலைமுறையினரிடம் பகுத்தறிவு மற்றும் சுயசிந்தனையை விதைக்கும் தளமாக இப்போட்டி அமைந்ததாகப் பார்வையாளர்கள் பாராட்டினர்.

What do you think?

ஐப்பசி மாத கந்தசஷ்டி திருவிழா

நாகூர் ஆண்டவர் தர்கா 470-வது கந்தூரி விழா! நாகையில் வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகள்!