in

பழனி கோவிலில் 100 கட்டண வரிசையில் வெயிலில் நின்று காத்திருந்த பெண் பக்தர்கள் மயக்கம்

பழனி கோவிலில் 100 கட்டண வரிசையில் வெயிலில் நின்று காத்திருந்த பெண் பக்தர்கள் மயக்கம்

100 டிக்கெட் வாங்கியும் வெயிலில் அடிப்படை வசதிகளை கூட கோவில் நிர்வாகம் செய்து தரவில்லை என பக்தர்கள் வேதனை

பழனியில் இன்று தொடர் விடுமுறை காரணமாக தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயில் ,ரோப் கார் நிலையங்கள் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் மலைக்கோவிலில் பத்து ரூபாய், நூறு ரூபாய் ,இருபது ரூபாய் வரிசையில் கட்டணங்கள் உள்ளது. இதில் 100 ரூபாய் கட்டணத்தில் வரிசையில் அதிகபடியான பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணபட்டது.

விடுமுறை தினத்தை ஒட்டி குவிந்த பக்தர்களால் இன்று மலைக்கோவிலில் உச்சிக்கால பூஜையின் போது பக்தர்கள் நீண்ட வரிசையில் வெயிலில் கை, குழந்தைகளுடன், முதியோர்கள் குடைகளை கையில் பிடித்தவாறு தலையில் துணியை போர்த்தியவாறு நீண்ட வரிசையில் நின்றனர். வரிசையில் வெயிலில் நின்ற போது பக்தர் பெண் பக்தர் ஒருவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

இந்த நிலையில் முதலுதவி அழைக்கபட்ட மருத்துவர் குழுவினர் மயக்கம் அடைந்த பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து திருக்கோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இன்று விடுமுறை தினத்தில் குவிந்த பக்தர் கூட்டத்தால் பக்தர்கள் வெயிலில் நின்று மயக்கம் அடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

தொண்டி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து: வாலிபர் பலி, மற்றொருவர் படுகாயம்!