தீபாவளி வியாபாரம் சாலைகளே தெரியாத அளவிற்கு குவிந்த பொதுமக்கள்
தீபாவளி வியாபாரம் மும்முரம். சாலைகளே தெரியாத அளவிற்கு குவிந்த பொதுமக்கள்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் எட்டாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி புத்தாடை, செருப்பு, வெடி என தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாநகர பகுதிகளான காந்திஜி சாலை, அண்ணா சாலை, பெரிய கோவில் சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

இதனால் சாலைகளே தெரியாத அளவிற்கு பொதுமக்கள் குவிந்து உள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஏராளமான பொது மக்கள் குவிந்து உள்ளதால் அப்பகுதியில் ஏராளமான காவல் துறையினர் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

