in

அண்ணாமலையார் கோவிலின் ஐப்பசி மாத உண்டியல் காணிக்கை….

அண்ணாமலையார் கோவிலின் ஐப்பசி மாத உண்டியல் காணிக்கை….

 

அண்ணாமலையார் கோவிலின் ஐப்பசி மாத உண்டியல் வருவாய் 5 கோடியே 6 லட்சம் பக்தர்கள் காணிக்கை….

ஐப்பசி மாத பௌர்ணமி கடந்த மாதம் 25ம் தேதி காலை 11:25 மணிக்கு தொடங்கி 26ம் தேதி காலை 10:09 மணிக்கு நிறைவு பெறும் என்பதால் 25ம் தேதி இரவு பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ளலாம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனை‌ தொடர்ந்து பௌர்ணமி கிரிவலம் மேற்கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 10 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர்.

கிரிவலம் வந்த பக்தர்கள் அண்ணாமலையார் கோவில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களில் வைக்கப்பட்ட உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.

உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கை எண்ணும் பணிகள் இன்று அண்ணாமலையார் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 5 கோடியே 6 லட்சத்தை 72 ஆயிரத்தி 963 ரூபாய், தங்கம் 160 கிராம் மற்றும் வெள்ளி 1 கிலோ 540 கிராம் பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளனர்.

What do you think?

ஜெயிலர் படம் பார்த்த அனுபவம் குறித்து பகிர்ந்த முதல்வர் ரங்கசாமி!

2668 அடி மலை ஏறுவதற்கு முற்றிலும் தடை