in

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவாரப் பணியில் ஈடுபட்ட சிவ பக்தர்கள்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவாரப் பணியில் ஈடுபட்ட சிவ பக்தர்கள்!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திரு கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி 10 நாட்கள் பகல் இரவு உற்சவம் நடைபெற உள்ளது.

வருகின்ற 24-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அதிகாலை பரணி தீபமும் அன்று மாலை 2668 அடி மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு உழவாரப் பணிகள் செய்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள தேசிய இந்து திருக்கோயில்கள் சார்பில் சுமார் 1500 சிவ பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள 64 அடி உயரமுள்ள தங்க கொடிமரம் மற்றும் கொடிமரம் முன்பாக உள்ள மகா தீப கொப்பரை பலி பீடம் உள்ளிட்ட கோவிலின் அனைத்து பகுதிகளிலும் காலை முதல் உழவாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள வெள்ளி ரிஷப வாகனம் வெள்ளி மயில் வாகனங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவனடியார்கள் தொடர்ந்து 7-வது ஆண்டாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உழவாரப் பணிகளை கார்த்திகை தீபத்தின் போது மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். சிவபெருமானுக்கு இறைத்தொண்டு செய்வதை தங்களுடைய வாழ்நாளின் முக்கிய பணியாக கருதி செய்து வருவதாக தெரிவித்தனர்.

What do you think?

திரையரங்கம், தொழிற்சாலைகளுக்கு ரூ.11,500 அபராதம் சுகாதாரத்துறை அதிரடி

தேனி நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர நகர்மன்ற கூட்டத்தில் காரசார விவாதம்