in

வேளாங்கண்ணியில் இலவச தென்னை கன்று வழங்கிய தவெகவினர்

வேளாங்கண்ணியில் இலவச தென்னை கன்று வழங்கிய தவெகவினர்

 

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு வேளாங்கண்ணியில் இலவச தென்னை கன்று வழங்கினார்.

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் வேளாங்கண்ணி பேரூர் கழகம் இணைந்து தவெகவினர் வேளாங்கண்ணியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், தென்னங்கன்றுகளை வழங்கி 500 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கியும் கொண்டாடினர்.

இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் சுகுமாரன், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தியாகு, வேளாங்கண்ணி பேரூர் கழக செயலாளர் பிரேம்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆகாஷ் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஹெலன், ஜோஸ்வின்மேரி ஆகியோர் பங்கேற்றனர்.

What do you think?

2026 எண் வடிவில் மாணவ மாணவிகளின் யோகா விழிப்புணர்வு……