in

கருமாரி தெப்பத்தில்  சிறப்பு அபிஷேகம்

கருமாரி தெப்பத்தில்  சிறப்பு அபிஷேகம்

 

25 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவில் கருமாரி தெப்பத்தில் எழுந்தருளி காந்திமதி அம்பாளுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

சுவாமி நெல்லையப்பர் சன்னதிக்கு காந்திமதி அம்பாள் எழுந்தருளி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சிவபூஜை வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் காந்திமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று காலை செப்புத் தேரில் காந்திமதி அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. மதியம் நெல்லையப்பர் கோவிலில் உள்ள கருமாரி தெப்பத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு காந்திமதி அம்பாள் எழுந்தருளினார். அம்பாளுக்கு பால், மஞ்சள், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் காந்திமதி அம்பாள் சுவாமி நெல்லையப்பரை பூஜை செய்யும் சிவபூஜை வைபவம் நடைபெற்றது.

இதற்காக வெண்பட்டு அணிந்து தங்கப் பூக்கூடையுடன் மேளதாளங்கள் முழங்க காந்திமதி அம்பாள் தனது சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு எழுந்தருளினார்.

அங்கு சுவாமி நெல்லையப்பருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காந்திமதி அம்பாளுக்கு ஷோடச உபசார மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த அரிய வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

சங்கர ராமேஸ்வரர் ஆலய ஐப்பசி திருக்கல்யாண திருவிழா திருதேரோட்டம்

திருக்கார்த்திகை தீபத் திருவிழா கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்