in

ராமேஸ்வரத்தில் முதல் முறையாக திறக்கப்பட்ட ரயில் பெட்டிகளுடன் கூடிய உணவகம், திறந்து வைத்த மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா.

ராமேஸ்வரத்தில் முதல் முறையாக திறக்கப்பட்ட ரயில் பெட்டிகளுடன் கூடிய உணவகம், திறந்து வைத்த மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா.

தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ராமேஸ்வரம் வருகை தந்து ராமேஸ்வரம் ரயில் நிலையத்தினை பணிகளை பார்வையிட்டார்.

இதன்பின் தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கோச் உணவகத்தினை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி விற்பனையை துவக்கி வைத்தார்.

செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது ;- ரயில்பெட்டி உணவகம் மதுரை கோட்டத்தில் ராமேஸ்வரத்தில் தான் முதன் முறை திறக்கப்பட்டுள்ளது. இதன்பின் கோவில்பட்டி மற்றும் பழனியில் திறக்க உள்ளதாகவும், அடுத்தபடியாக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு ஜூலை மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நிறைவு பெறும். அதன்பின் திறக்கும் தேதி அறிவிக்கப்படும்.

மேலும், சென்னை – ராமேஸ்வரம் வந்தேபாரத் ரயில் போக்குவரத்து இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்து எப்போது இயக்க கூறினாலும் இயக்குவதற்கு மதுரைகோட்டம் தயாராக உள்ளது என தெரிவித்தார்.

What do you think?

13 கார்கள், 100 கணினிகள் ஜப்தி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

புதுச்சேரி கடற்கரை சாலையில் புதிய கிரிமினல் சட்டங்கள் கண்காட்சி