in

நடராஜபுரம் துர்க்கையம்மன் ஆலய பால்குட காவடி விழா கோலாகலம்

நடராஜபுரம் துர்க்கையம்மன் ஆலய பால்குட காவடி விழா கோலாகலம்

 

உத்தண்டராயன்பேட்டை நடராஜபுரம் செல்வவிநாயகர் ராகு கால துர்க்கையம்மன் ஆலய பால்குட காவடி 15 அடி நீளம் அலகு குத்தி பக்தர் ஒருவர் வீதியுலா வந்தது காண்பவரே பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உத்தண்டராயன்பேட்டை நடராஜபுரம் செல்வவிநாயகர் ராகு கால துர்க்கையம்மன் ஆலய பால்குட காவடி வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக ஆலயத்திலிருந்து புறப்பட்டு முக்கிய விதிகள் வழியாக வான வேடிக்கை மேள தாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயம் வந்தடைந்தனர்.

பின்னர் பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பாலினை கொண்டு இரு தெய்வங்களுக்கும் பால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இவ்விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர். இவ்விழா ஏற்பாடுகளை ஊர் கிராமவாசிகள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What do you think?

மின்னல் வேகத்தில் கணிதம்: 3 வயது குழந்தைகளின் அசத்தலான சாதனை