in

மன்னர் மூன்றாம் சார்லஸின் மரணம் பற்றிய செய்தி போலியானது


Watch – YouTube Click

மன்னர் சார்லஸ் மரணம்? இங்கிலாந்தில் உச்சகட்ட பரபரப்பு

மன்னர் மூன்றாம் சார்லஸின் மரணம் பற்றிய செய்தி போலியானது என்று உக்ரைனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் (75), புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கடந்த பக்கிங்காம் அரண்மனை அறிவித்திருந்தது.

அதாவது, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி இங்கிலாந்து ராணியும், தனது தாயுமான எலிசபெத் ராணி காலமான பிறகு, இங்கிலாந்தின் புதிய மன்னராகப் மூன்றாம் சார்லஸ் பதவியேற்றார். இவர் பதவியேற்று சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதன்பின், அவர் மருத்துவமனையில் புற்றுநோய் பெற்று வருகிறார். இந்த சூழலில், இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் இறந்துவிட்டதாக ரஷ்ய ஊடங்களில் தீயாக ஒரு தகவல் பரவியது. இங்கிலாந்து அரச குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறி, இந்த செய்தியுடன் மன்னர் சார்லஸ் குறித்த புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.

இது ரஷ்ய ஊடகங்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் தீயாக பரவியது. அதுமட்டுமில்லாமல், சில பிரபல வெளிநாட்டு செய்தி ஊடகம் ஒன்று, சார்லஸ் மன்னருக்கு இரங்கல் செய்தியும் வெளியிட்டது. இதனால், இந்த தகவலின்படி, மன்னர் மூன்றாம் சார்லஸ் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பேசி வந்தனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் இறந்துவிட்டதாக பல்வேறு இடங்களில் வெளியான செய்தி போலியானது என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம் என்று உக்ரைனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

அரசு பொறியியல் கல்லூரி மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

விழந்த சமந்தாவை பார்த்து தெறித்து ஓடிய இயக்குனர்