டெல்டா பகுதியை படையெடுக்கும் வட மாநில தொழிலாளர்கள்
டெல்டா பகுதியை நோக்கி படையெடுக்கும் வட மாநில விவசாய தொழிலாளர்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு பணிகளை வடமாநில தொழிலாளர்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகி வரும் நிலையில் தற்போது விவசாயமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
100 நாள் வேலை திட்டம் காரணமாக விவசாய பணிக்கு வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்த நிலையில் தற்போது அந்த பணியினை வடமாநில தொழிலாளர்கள் கைப்பற்ற தொடங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் பகுதிகளில் விவசாய பணிகளுக்கு வடமாநில தொழிலாளர்களை விவசாயிகள் பணியமத்தி வருகின்றனர்.

நாடோடி வாழ்க்கையை மேற்கொள்ளும் இந்தவடமாநில விவசாய தொழிலாளர்கள் குழுக்களாக தாங்கள் வேலை செய்யும் இடத்திலேயே சமைத்து சாப்பிட்டு மற்றும் அங்கேயே தங்கி நாற்று பறிப்பது, நாட்டு நடுவது, அறுவடை செய்வது என அனைத்து விவசாய பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு இடத்தில் பணி முடிந்ததும் அடுத்த இடத்திற்கு குழுவாகவே பயணித்து தங்களது பணியை தொடர்ந்து வருகின்றனர்.


