in

கைலாய யாத்திரை நிறைவு: பேரூர் ஆதீனத்திற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கைலாய யாத்திரை நிறைவு: பேரூர் ஆதீனத்திற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

 

ஆன்மீகப் பயணமாக 16 நாட்கள் கைலாயம் சென்று திரும்பிய பேரூர் ஆதீனத்திற்கு விமான நிலையத்தில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக உற்ச்சாக வரவேற்பு அளிக்க பட்டது.

ஆன்மீகப் பயணமாக 16 நாட்கள் கைலாயம் சென்று திரும்பிய பேரூர் ஆதீனம் 25-ஆம் பட்டம் என்றழைக்கபடும் மருதாச்சல அடிகளார் இன்று விமான மார்கமாக கோவை வந்தடைந்தார் அவ்வாறு, கோவை விமான நிலையம் வந்த அவருக்கு, உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக, அமைப்பின் தலைவர் முகமது ரஃபி அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருதாச்சல அடிகலார் கூறியதாவது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆன்மீக பயணமாக கைலாய மலைக்கு செல்லுவதை கடமையாக கொண்டுள்ளனர் இதன் ஒரு பகுதியாக தானும் சென்று வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனை சைவர்களின் திருமலையாக கருத படுவது இந்த கைலாயமலை இங்கு செல்வது மறபு இதனால் தான் சென்று வந்ததாக தெரிவித்தார்.

தொடர்த்து 5 வது முறையாக நான் சென்று வருவதாக கூறியவர் அங்குள்ள கைலாய நாதரை வழிபட்டு வந்ததாக தெரிவித்தார். அவ்வாறு வந்த எனக்கு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக வரவேற்பு அளிக்க பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

முன்னதாக, ஆன்மீகப் பெரியோர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு தங்களது வரவேற்பைத் தெரிவித்தனர். வந்திருந்த அனைவருக்கும் நன்றிகளை சாந்தலிங்க அடிகலார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

வரசித்தி விநாயகர் ஆலயம் மற்றும் மணிவண்ணன் சாது சித்தர் பீட ஆலய கும்பாபிஷேகம்

64 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் செய்து சாதனை படைத்தவர் யாழ்ப்பாணம் வருகை