in

வரசித்தி விநாயகர் ஆலயம் மற்றும் மணிவண்ணன் சாது சித்தர் பீட ஆலய கும்பாபிஷேகம்

வரசித்தி விநாயகர் ஆலயம் மற்றும் மணிவண்ணன் சாது சித்தர் பீட ஆலய கும்பாபிஷேகம்

 

பனமங்கலத்தில் வரசித்தி விநாயகர் ஆலயம் மற்றும் மணிவண்ணன் சாது சித்தர் பீட ஆலய கும்பாபிஷேகம். தருமபுரம் ஆதீனம் பங்கேற்று தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பனமங்கலம் கிராமத்தில் உப்பனாற்று கரையின் நடுவில் அமைந்துள்ளது வர சித்தி விநாயகர் கோயில்.இக்கோயில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தது.

இதனை அடுத்து கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது முன்னதாக இரண்டாம் கால யாக சாலை பூஜை நிறைவடைந்து புனித நீர் கடங்கள் கோயிலை வலம் வந்து விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதே போல் அருகில் அமைந்துள்ள மணிவண்ணன் சாது சித்தர் பீடம் ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகமும் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் பங்கேற்று தரிசனம் செய்தார்.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி மற்றும் கிராமவாசிகள் பக்தர்கள் செய்திருந்தனர். இதில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

What do you think?

80 வயது மூதாட்டி உட்பட 5 பேர் மீது தாக்குதல்; சவ ஊர்வலத்தில் பதற்றம்

கைலாய யாத்திரை நிறைவு: பேரூர் ஆதீனத்திற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு