in

பிரம்மாண்டமாக வெளியிட்ட சூது கவ்வும் teaser

பிரம்மாண்டமாக வெளியிட்ட சூது கவ்வும் teaser

மாணவர்களே பாடத்தில் சந்தேகம் இருந்தால் கேட்டு…கங்க… மிர்ச்சி siva….

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் சூது கவ்வும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எஸ் ஜே அர்ஜுன் உருவாக்கத்தில் சிவி குமார் தயாரித்துள்ளார். 10 ஆண்டுகள் கழித்து தற்பொழுது மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது இப்படத்தில் மெச்சி சிவா, ASHOK SELVAN கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் இப்படம் மே மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் .தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது இந்நிகழ்ச்சியை விஜய் டிவி மாகாபா தொகுத்து வழங்கினார் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அர்ஜுன் குறுகிய காலத்தில் ஜெயிப்பது அனைவருக்கும் பிடிக்கும் அதை மையமாக வைத்து தான் இந்த படத்தை நான் எடுத்திருக்கிறேன் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி lead
கேரக்டரில் நடித்திருப்பார் ஆனால் அவர் கதாபாத்திரத்தை இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி siva இடுகட்டி யுள்ளார் . இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் இசையமைத்திருக்கிறார் சூது கவ்வும் முதல் பாகத்தின் பாடல்கள் மற்றும் இசை அருமை அதே மாதிரி இரண்டாம் பாகமும் சிறப்பாக அமைந்திருக்கிறது என்று இயக்குனர் கூறியுள்ளார் இசை மட்டுமல்ல முதல் பாகத்தை போல் காமெடியையும் தெறிக்க விட்டிருகோம் . மேலும் இப்படம் குறித்து சிவா கூறியதாவது என் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முதன்முறையாக மாணவர்களுக்கு மத்தியில் வெளியிடுவது இதுதான் முதல் முறை உங்கள் பாடத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னிடமும் மாகாபாவிடமும் தாராளமாக கேட்டுக் கொள்ளலாம் என்று மாணவர்களிடம் கூறினார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விழா விழாவை பார்த்தபோது ஏதோ ஃபிலிம் fare அவார்டு விழா ஏற்பாடு செய்திருகிறார்கள் என்று மகிழ்ச்சியை தெரிவித்தார். இதனை அடுத்து இப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி பாபி சினிமா, கார்த்திக் உள்ளிட்டோர் சமூக வலைதளத்திலும் வெளியிட்டனர்.

What do you think?

இன்று அமைச்சராக பதவியேற்கிறார் பொன்முடி

goat படத்துல… நான் நடிச்சா நல்லா இருக்குமா பாஸ்.. காமெடி பண்ணாதிங்க… மிர்ச்சி siva