லாஸ்பேட்டை திரௌபதி அம்மன் தேவஸ்தானம் ஸ்ரீ அய்யனார் ஆலயம் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய திருவிழா
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட திரௌபதி அம்மன் தேவஸ்தானம் ஸ்ரீ அய்யனார் ஆலயம் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற அபிஷேக தீபாராதனை மற்றும் ஊரணி பொங்கல் வைக்கும் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் வி பி சிவக்கொழுந்து கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ திரௌபதி அம்மன் தேவஸ்தானம் ஸ்ரீ ஐயனார் ஆலயம் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய திருவிழா இன்று ஹொமத்துடன் தொடங்கியது தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு ஊரணி பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக லாஸ்பேட்டை தொகுதி என் ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சப்தகிரி வி பி சிவக்கொழுந்து மற்றும் சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் VPS ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
மேலும் இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர் தொடர்ந்து இந்த பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் வி பி சிவக்கொழுந்து பிரசாதங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் நந்தா ஸ்ரீதரன், நந்தா பூவராகவன், வன்னியர் சங்கத் தலைவர் நரசிம்மன், இலாசுப்பேட்டை தொகுதி பா.ம.க தலைவர் திருமால் மற்றும் என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர் முன்னதாக ஆலய நிர்வாகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் வி பி சிவக்கொழுந்து சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் VPS ரமேஷ் குமார் ஆகியோருக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது..


