in

புதுவையில் தவெக கூட்டணி குறித்து தலைமை முடிவு எடுக்கும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

புதுவையில் தவெக கூட்டணி குறித்து தலைமை முடிவு எடுக்கும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

தமிழக முதல்வர் விஜய், புதுச்சேரி முதல்வருக்கு நெருக்கமானவர். தமிழக அமைச்சர் ஆனந்தும் அவரை அடிக்கடி சந்திக்கிறார். தமிழகத்தில் முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோது ஊழலுக்கு இடமில்லை என மக்கள் முன்பு அறிவித்தார்.

அதேபோல் வரும் 17ல் அமைச்சர்கள் பதவியேற்பில் முதல்வர் ரங்கசாமியும் ஆட்சியில் ஊழல் நடைபெறாது என பகிரங்கமாக அறிவிப்பாரா? அவரை சுற்றி வரும் ஆறு புரோக்கர்களை வெளியே அனுப்புவாரா? என கேள்வி எழுப்பினார்.

பதவியேற்பு விழாவில் பேசாவிட்டாலும் காந்தி சிலை முன்பு முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கூடி ஆட்சியில் ஊழல் நடைபெறாது என சபதம் எடுக்க தயாரா? புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் 717 மதுபானக் கூடங்களை மூட விஜய் உத்தரவிட்டு மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 900 பார்கள் உள்ளன. கோவில், மசூதி, சர்ச், பள்ளி, குடியிருப்பையொட்டியுள்ள பார்கள், ரெஸ்டோபார்கள் மூட முதல்வர் ரங்கசாமி தயாரா அதை உண்மையில் செய்தால் விஜய் நண்பர் என ஏற்கலாம் என்றார்.

தவெகவுடன் தமிழகத்தில் தான் காங்கிரஸ் இணைந்து செயல்படுகிறது, புதுவையில் தவெகவுடன் கூட்டணி குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்றார்

What do you think?

தூத்துக்குடி புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்