in

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்க தயாராகும் 500 கிலோ கேக்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்க தயாராகும் 500 கிலோ கேக்

 

125 கிலோ உலர்பழங்கள்- பருப்புகள்.. மது வகைகள்.. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தயாராகும் 500 கிலோ கேக்.. ஆர்வத்துடன் பங்கேற்ற சுற்றுலா பயணிகள்…

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள லா புரோகோப் ய உணவகத்தில் இரண்டாவது கிறிஸ்மஸ் கேக் தயாரிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

பாரம்பரிய முறைப்படி பழ வகைகளில் மதுபானங்களை ஊற்றி ஊறல் வைக்கும் விழா உணவகத்தில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்..
125 கிலோ எடையிலான திராட்சை, முந்திரி, செரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட், பேரிச்சம் என 20 வகையான நட்ஸ் மற்றும் 10 லிட்டர் உயர் ரக மதுவகைகளை கலந்து மகிழ்ந்தனர்.

இந்த கலவையானது 45 நாட்கள் ஊர வைக்கப்படுகிறது. இவற்றை பயன்படுத்தி 500 கிலோ அளவில் பிரமாண்ட கேக் தயாரித்து காட்சிப்படுத்தி வாடிக்கையாளர் மற்றும் சக ஊழியர்களுக்கு புத்தாண்டு வரை வழங்கப்பட உள்ளதாக ஹோட்டல் ஜெனரல் பொது மேலாளர் நடராஜன் தெரிவித்தார்…

What do you think?

என்எல்சி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பு பேரணி

ராகவா லாரன்ஸ் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்