in

தூத்துக்குடி புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் 

தூத்துக்குடி புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

தூத்துக்குடியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது மாநிலத் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜெஸ்ஸி மாவட்டச் செயலாளர் ஜெயபாக்கியம் மாவட்ட தலைவர் பெருமாள் முன்னாள் மாநில துணைத்தலைவர் தமிழரசன் மற்றும் தமிழக முழுவதும் இருந்து ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்

பின்னர் மாநிலத் தலைவர் செல்லத்துரை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசுக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

வருகிற 18-ஆம் தேதி சட்டமன்ற கூட்ட தொடர் துவங்க உள்ள நிலையில் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையான சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் மேலும் சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலை படியுடன் கூடிய ஓய்வூதியம் ருபாய் 7850 வழங்க வேண்டும்

மேலும் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கி அவர்கள் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக முழுவதும் சுமார் 60 சதவீதம் காலி பணியிடங்கள் உள்ளது இந்த காலி பணியிடங்களை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
உடனடியாக இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்

எனவே தமிழக அரசு சத்துணவு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையில் மாநில செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்

பேட்டி செல்லத்துரை மாநிலத் தலைவர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்

What do you think?

நெய்வேலி வட்டம் 9  ஜே.சி போஸ் சாலையை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சிற்றரசு 57. இவர் என்எல்சி 1 A  சுரங்கத்தில் பணியாற்றி வருகிறார்.

புதுவையில் தவெக கூட்டணி குறித்து தலைமை முடிவு எடுக்கும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்