தொண்டி தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணக் கொள்ளை: தட்டிக்கேட்ட பெற்றோர்களுக்கு மிரட்டல் – என புகார்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி பகுதியில் உள்ள ‘அல் ஹிலால் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தட்டிக்கேட்ட பெற்றோர்களைப் பள்ளி நிர்வாகம் தரக்குறைவாகப் பேசி மிரட்டுவதாக கூறும் சமூக ஆர்வளர் வீடியோ வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழக அரசின் உத்தரவுப்படி, தனியார் பள்ளிகள் தங்களின் கல்வி கட்டண விபரங்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் அறிவிப்புப் பலகையில் (Notice Board) வைக்க வேண்டும். ஆனால், இப்பள்ளி நிர்வாகம் எவ்வித முன்னேற்பாடுகளையும் செய்யாமல் கட்டண விபரங்களை மறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய கல்வி ஆண்டிற்கான சேர்க்கை மற்றும் கட்டணம் செலுத்தும் பணிகளின் போது, அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம், “ஏன் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறீர்கள்? கட்டண விபர அறிவிப்புப் பலகை எங்கே?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்குப் பள்ளி நிர்வாகத் தரப்பு, தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் அரசு உத்தரவை நீதிமன்றம் மூலம் சேலஞ்ச் செய்ய உள்ளதாகவும் அதனால் கட்டணத்தை கட்டிட்டான் ஆக வேண்டும் எனவும் அலட்சியமாக பதில் கூறிய வருகின்றனர் ஆடியோ வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.அந்த ஆடியோவில் மாவட்ட நிர்வாகம் எவ்வித உத்தரவும் அவ்வாறு பிறப்பிக்க வில்லை என்றும் கூறுகிறார்
“உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அலட்சியமாகப் பதிலளித்ததோடு, கேள்வி கேட்ட பெண் பெற்றோர்களைத் தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் பேசும் வீடியோ ஆதாரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயம் குறித்து அரசுத் துறை அதிகாரிகளோ அல்லது அமைச்சர்களோ வெளிப்படையான விபரங்களை இதுவரை அறிவிக்காதது வேதனையளிப்பதாகப் பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்டக் கல்வி அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, திருவாடானை தாலுகாவில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் முறையான ஆய்வு நடத்த வேண்டும் என்றும், விதிமீறலில் ஈடுபடும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


