விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மாவட்ட விளையாட்டு அரங்கில் நேரில் ஆய்வு
நெடுஞ்சாலைகள் துறை, பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மாவட்ட விளையாட்டு அரங்கில் நேரில் ஆய்வு….
ஆண்டு முழுவதும் விளையாட்டு விடுதி திறந்து இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்….
சர்வதேச தரத்தில் உணவு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்…..
மாணவிகளிடம் ஆதவ் அர்ஜுனா உறுதி…..

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள உடற்பயிற்சி கூடம் பராமரிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் வாலிபால் அரங்கில் ஸ்கேட்டிங் விளையாடிய மாணவிகளை சந்தித்து உரையாடினார். மேலும் வாலிபால் அரங்கில் வாலிபால் விளையாட்டு விளையாடினார்.
இதன் பின்பு விளையாட்டு அரங்கில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளும் மாணவிகளுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரையாடினார். இந்த உரையாடலின் போது மாணவிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் உணவுகள் மற்றும் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் மாணவிகளுக்கு சர்வதேச அளவிலான பயிற்சிகள், உணவு, காலை பயிற்சி மேற்கொண்ட உடன் ஒரு மணி நேரம் ஓய்வு எடுக்க உரிய அனுமதியை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் வருடம் முழுவதும் மாணவிகளின் தங்கும் விடுதிகள் இயங்கப்படும் என்றும் ஆர்வம் உள்ள மாணவிகள் விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் பயிற்சி எடுக்கும் மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பிசியோதெரபிஸ்ட் உடன் இருக்கவும், பத்து நாட்களுக்கு ஒரு முறை வீரர்களின் உடல் பரிசோதனை செய்யும் வகையில் பிசியோதெரபிஸ்ட் பணியை மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தமிழ்நாடு முழுவதும் 47 புதிய விளையாட்டு விடுதிகள் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் விளையாட்டு மாணவர்களுக்கு தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகள், மூன்று மாதத்திற்கு ஒரு முறை விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய பெட்டகம், காலனி, உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என்றும் நீங்கள் விளையாட்டு பயிற்சியை உரிய முறையில் மேற்கொண்டு மாநில அளவிலும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என மாணவிகளுடன் உரையாற்றினார்.
மேலும் மாணவிகள் நிகழ்த்திய மல்லர் கம்பம் விளையாட்டு நிகழ்ச்சியை கண்டு களித்தார். மேலும் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை ஹாக்கி விளையாட்டு அரங்கை பார்வையிட்டார்.
மேலும் மாணவி விடுதியில் உள்ள வசதிகள் குறித்து விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.


