தென்மேற்கு பருவமழை எதிரொலி: தூத்துக்குடியில் மிதமான மழை
தூத்துக்குடி தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் தற்போது தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கோரம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமான மற்றும் சாரல் மழை.
தூத்துக்குடி கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் தென் மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்பும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இதைத்தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடும் வெயில் அடித்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் கோரம்பள்ளம் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமான மற்றும் சாரல் மழை பெய்து வருவதுடன் குளிர்ந்த காற்று வீசி வருவதால் வெப்பம தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

