கேட்பாரற்று கிடக்கும் அம்மா உடற்பயிற்சி கூடம்
ரூபாய் 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூடம் கேட்பாரற்று கிடக்கும் அவல நிலை…..
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அனுகுமலை கிராமத்தில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூடம் கேட்பாரற்று கிடக்கிறது.

அம்மா உடற்பயிற்சி கூடம் என்பது கிராமப்புற இளைஞர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள கொண்டுவரப்பட்ட திட்டமாகும். கிராமப்புற இளைஞர்கள் நவீன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி வசதிகளை இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்த அம்மா உடற்பயிற்சி கூடங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நிறுவப்பட்டு வந்தது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அணுகுமலை கிராமத்தில் 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நம்ம உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்கா முதல் மண்டியும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
குறிப்பாக அம்மா உடற்பயிற்சி கூடத்தில் கை, கால், மார்பகம், சோல்டர் உள்ளிட்ட உடலில் பல்வேறு பாகங்களுக்கு உடற்பயிற்சி அதிகம் வகையில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த அம்மா உடற்பயிற்சி கூடம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இலை, தழைகள் சூழ்ந்தும், உடற்பயிற்சி கருவிகள் அனைத்தும் துரு பிடித்து கேட்பாரற்று கிடைக்கிறது.
கிராமப்புற இளைஞர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கொண்டு வந்த இந்த திட்டத்தினை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு கருத்தில் கொண்டு ஒவ்வொரு கிராமத்தில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக்கூடத்தை சீரமைத்து தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


