மர்ம நபர்கள் கைவரிசை: 35 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகை, வெள்ளி கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வி எம் எஸ் நகர் 2 வது தெருவில் வசித்து வருபவர் தாவூத் இவர் குவைத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் அவருடைய மனைவி பேரோஸ்பானு இரண்டாவது பிரசவத்துக்காக கடந்த 3ஆம் தேதி பண்ருட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் முடிந்து நேற்று இரவு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் வெளிக்கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே சென்றபோது பூட்டி வைத்த கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த மர பீரோவில் இருந்து சுமார் 35 பவுன் நகை, வெள்ளி 1/2 கிலோ மற்றும் ரூ.22000 ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் ஆய்வாளர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் திருடு போன வீட்டில் விசாரணை நடத்தினர் வருகின்றனர்.

மேலும் திருட்டு சம்பவம் குறித்து இரண்டு தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகை, வெள்ளி கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.


